Order to stop calling My Lord | மை லார்ட் என அழைப்பதை நிறுத்தும்படி உத்தரவு

புதுடில்லி,உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கும் போது, நீதிபதிகளை ‘மை லார்ட்’ மற்றும் ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பது வழக்கம்.

இந்த நடைமுறையை எதிர்க்கும் வழக்கறிஞர்களும் உள்ளனர். மை லார்ட் போன்ற வார்த்தைகள், காலனித்துவ மரபுகள், அடிமைத்தனத்தின் அடையாளங்கள் என்பது அவர்களது கருத்தாக உள்ளன.

கடந்த 2006ல், இந்திய பார் கவுன்சில், எந்தவொரு வழக்கறிஞரும் நீதிபதிகளை, ‘மை லார்ட் என அழைக்கத் தேவையில்லை’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்தது. அந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தொடர்ந்து, மை லார்ட் என நீதிபதிகளை அழைத்தார்.

அதற்கு நீதிபதி நரசிம்மா, ‘எத்தனை முறை நீங்கள் மை லார்ட் என அழைப்பீர்கள். அதற்கு பதிலாக சார் என அழைக்கலாமே. நீங்கள் மை லார்ட் என்று அழைப்பதை நிறுத்தினால், என் சம்பளத்தில் பாதியை உங்களுக்குத் தருகிறேன்’ என கிண்டலாக கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.