கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக இன்று கனம்ழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் நள்ளிரவு தொடங்கி கனமழை நீடித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.