XUV400 எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு ரூ.3 லட்சம் தீபாவளி தள்ளுபடி அறிவித்த மஹிந்திரா

நவம்பர் 2023 தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா தனது ஒரே எலக்ட்ரிக் எஸ்யூவி XUV400 மாடலுக்கு ரூ.3 லட்சம் வரை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுதவிர XUV300, பொலிரோ, பொலிரோ நியோ மற்றும் மராஸ்ஸோ எம்பிவி மாடலுக்கு சலுகை உள்ளது.

ஆனால், அதிக வரவேற்பினை பெற்ற தார் எஸ்யூவி, எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்ப்பிய-என் எஸ்யூவிகளுக்கு சலுகை ஏதும் அறிவிகப்படவில்லை.

Mahindra Diwali Festive offers

மஹிந்திராவின் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ள நிலையில், குறைந்த கட்டணம் கொண்ட இ.எம்.ஐ திட்டம், இலவச காப்பீடு, 5 வருடத்திற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் இலவசம் மற்றும் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

இருவிதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ள நிலையில் குறைந்த சக்தி கொண்ட 34.5kWh பேட்டரி பெற்ற XUV400 கார் 375 கிமீ ரேஞ்சு கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, 39.4kWh பேட்டரியுடன் இந்திய ஓட்டுநர் சான்றிதழ்படி (MIDC- Indian driving cycle) ஒருமுறை சார்ஜ் செய்தால் 456கிமீ ரேசஞ்சை பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

xuv 400 diwali offers

அடுத்து, XUV300 காருக்கு ரூ.80,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,20,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டண தள்ளுபடி மட்டுமல்லாமல், ஆக்செரிஸ் தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

ரூ.73,000 வரை மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டண தள்ளுபடி மற்றும் ஆக்செரிஸ் தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி மாடலுக்கு  ரூ.70,000 மற்றும் பொலிரோ நியோ மாடலுக்கு ரூ.50,000 என கட்டண தள்ளுபடி மற்றும் ஆக்செரிஸ் தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் நடப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு டீலர்களிடம் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட சலுகைகளை நவம்பர் மாதம் மட்டும் கிடைக்கலாம். முழுமையான சலுகைகள் குறித்தான விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.