
சந்தானம் நடிக்கும் புதிய பட அப்டேட்!
நடிகர் சந்தானம் ஒரு காலகட்டத்தில் காமெடியில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார். கடந்த சில வருடங்களாக அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றாலும் விடாமுயற்சியாக தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது 80ஸ் பில்டப் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து கட்டா குஸ்தி பட இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல பைனான்சியர் கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.