
நரைச்ச முடி – துருவ நட்சத்திரம் படத்தின் லிரிக் வீடியோ வெளியானது
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா உட்பட பலர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இப்படம் இம்மாதம் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள, ‛நரைச்ச முடி' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடலில் விக்ரமை ரிது வர்மா வர்ணிப்பது போன்று வரிகள் இடம்பெற்றுள்ளது.