IND vs SA Match Highlights: இந்தியா – தென்னாப்பிரிக்கா (IND vs SA) அணிகள் மோதிய இன்றைய லீக் போட்டிதான் உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) மிக முக்கிய போட்டியாக பார்க்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் முன்னணி இருக்கும் அணிகள் மோதிக்கொள்ளும் இந்த போட்டி, யாருக்கு முதலிடம் என்பதே முக்கிய குறியாக இருந்தது. இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன.
இரு அணிகளும் இந்த போட்டிக்கு முன் வரை 7 போட்டியில் விளையாடி இருந்தன. இந்தியா இந்த 7 போட்டிகளையும் வென்றிருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே தோற்றது. அந்த வகையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களின் அதிரடியாலும், விராட் கோலியின் (Virat Kohli) நிதானத்தாலும், ஷ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தினாலும், சூர்யகுமார், ஜடேஜாவின் நல்ல கேமியோவிலும் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 326 ரன்களை எடுத்தது. விராட் கோலி 101 ரன்களை அடித்து அவரது 49ஆவது ஓடிஐ சதத்தை பதிவு செய்து சச்சின் டெண்டுல்கரின் சதத்தை சமன் செய்தார். மேலும், ஒருநாள் அரங்கில் இந்திய மண்ணில் மட்டும் 6 ஆயிரம் ரன்களையும் விராட் கோலி இன்று கடந்தார்.
— BCCI (@BCCI) November 5, 2023
புள்ளிப்பட்டியலில் (ICC World Cup Points Table) இந்திய அணி 8 போட்டிகளிலும் வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 2 தோல்விகளுடனும், 6 வெற்றிகளுடனும் 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் முறையே 3ஆவது, 4ஆவது, 5ஆவது, 6ஆவது இடத்தில் உள்ளன.
அரையிறுதியில் எந்தெந்த அணி எந்தெந்த இடத்தில் இடம்பிடிக்கும் என்பது தெரியாவிட்டாலும் இந்திய அணி இனி முதலிடத்தில்தான் இருக்கும். நெதர்லாந்து அணியுடன் தோல்வியடைந்தாலும் இந்தியா முதலிடத்தில்தான் இருக்கும். எனவே, இந்திய அணி லீக் சுற்றின் முடிவில் நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடன் முதல் அரையிறுதிப்போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். 2ஆவது, 3ஆவது இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும்.