வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில், இந்திய ஏஜென்ட்கள் தொடர்புள்ளதாக கனடா கூறிய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எங்கே என அந்நாட்டு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ள இந்தியா, ஏற்கனவே விசாரணை கறைபடிந்துவிட்டது என குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியதாவது: பயங்கரவாதி கொலை வழக்கு விசாரணையில் உதவுவதற்கு ஏதுவாக இந்தியாவிடம் இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஆதாரம் எங்கே உள்ளது? விசாரணை முடிவு எங்கே ?

இந்த விவகாரத்தில், ஒரு படி மேலே சென்று, விசாரணை கறைபடிந்து விட்டது என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன். இந்த கொலை விவகாரத்தில் இந்தியா அல்லது இந்திய ஏஜென்ட்கள் உள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன் வைக்குமாறு மேல் மட்டத்தில் இருந்து யாரோ அழுத்தம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதி கொலை விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அந்நாட்டிற்கான நமது தூதரக உயர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியது.
கனடாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, டில்லியில் உள்ள அந்நாட்டிற்கான தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றியதுடன், தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிட்டு பதிலடி கொடுத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement