IND vs SA: 300 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாது – ஈடன் கார்டன் பிட்ச் ரிப்போர்ட்..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா உலக கோப்பை லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உலக கோப்பையில் எதிர்கொள்ள இருக்கின்றன. இந்த சூழலில் கொல்கத்தா மைதானம் எப்படி இருக்கும்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்போதைய கணிப்பின்படி ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா சென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியோர் சீரான இடைவெளியில் போட்டி நடைபெறும் பிட்சை பார்வையிட்டனர். 

கொல்கத்தாவின் தாதா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் மைதானத்துக்கு வந்து பிட்சை பார்த்துவிட்டு சென்றுள்ளார். அப்போது மைதான பராமரிப்பாளருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர், தென்னாப்பிரிக்கா அணியின் சப்போர்ட் பயிற்சி குழுவிடன் பேசிவிட்டு சென்றுள்ளார். இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை அவர் சந்திக்கவில்லை. இருப்பினும் மைதானம் குறித்த தன்னுடைய அனுமானத்தை இந்நேரம் இந்திய அணிக்கு தெரிவித்திருப்பார் என நம்பப்படுகிறது. 

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேசும்போது, இந்த மைதானத்தில் நிச்சயம் 300 ரன்களை எல்லாம் அடிக்க முடியாது. நிறைய ஓடி ரன்களை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். பந்துவீச்சாளர்கள் பந்துகளை சரியான திசையில் அடிக்கும்போது அவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். இரண்டும் வேக விக்கெட்டுகளாகவே மைதானம் இருக்கும் என பவுமா கூறியிருக்கிறார்.  

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மைதான பராமரிப்பாளரிடம் பேசி மைதானம் குறித்த தகவல்களை கேட்டுக் கொண்டார். பின்னர் பேசிய அவர், மைதானம் குறித்து பெரிதாக நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை, எப்படியான டிராக்காக இருந்தாலும் நாங்கள் விளையாட தயாராகவே இருக்கிறோம். மழைக் குறுக்கீடு, பனிப்பொழிவு ஆகியவற்றுக்கு முன்னால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. இவறுக்காக நாங்கள் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதும் செய்ய மாட்டோம். உலக கோப்பை தொடரின் கடந்த போட்டிகளில் விளையாடிய அணியே இந்த போட்டியில் களமிறங்கும் என டிராவிட் தெரிவித்துள்ளார். 

எப்படி பார்த்தாலும் ஈடன் கார்டனில் 300 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாது என்ற கணிப்பே மேலோங்கி இருப்பதால், டாஸ் வெற்றி பெறும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.