சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கமிட்டான திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க சில மாதங்கள் தாமதமாகும் என சொல்லப்படுகிறது. விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்குப் பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளாராம் வெற்றிமாறன். இந்நிலையில், இப்படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளதாக தரமான அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.
