Vijay: "விஜய் அரசியலுக்கு வரலாம்; ஆனால்…" – வெற்றிமாறன் சொன்ன பதில்

நடிகர் அரசியலுக்கு வருவது பற்றி அவராகத் தெரிவிக்கவில்லை என்றாலும் அவரது செயல்பாடுகள், அமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் அதுகுறித்து முன்னறிவிப்பாகவே இருக்கின்றன.

அரசியல் தொடர்பான நிர்வாகிகள் கூட்டம், மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியது, சங்கங்கள் உருவாக்கம், இலவச பாட சாலைகள் என அரசியலை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் மேடைப் பேச்சுகளிலும் அவற்றை சூசகமாக வெளிபடுத்திய வண்ணமிருக்கிறார். இந்நிலையில் பலரும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று துப்பரவுப் பணி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றி மாறன், சினிமா குறித்தும் விஜய் அரசியல் பேச்சு குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

வெற்றி மாறன்

இது பற்றி பேசிய வெற்றிமாறன், “சினிமா நல்ல விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது, கெட்ட விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. நிறைய நல்ல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறது. உதாரணமாக, ‘ஜெய்பீம்’ படத்தால் பழங்குடி மக்களுக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

விஜய் அரசியல் என்ட்ரி குறித்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தவர், “அவங்க அரசியலுக்கு வருதற்கான வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாருக்கும் அரசியலுக்கு வருதற்கான உரிமையிருக்கிறது. ஆனால், அதற்கு முன் அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அதன் பிறகு அரசியலுக்கு வரவேண்டும். விஜய்யும் முதலில் களத்தில் இறங்கி வேலை செய்தபிறகு அரசியலுக்கு வரவேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.