ஐபோன் 14 பிளஸ் வெறும் 20,400 ரூபாயில்… மாதத் தவணையிலும் வாங்கலாம் – முழு விவரம்!

Flipkart Big Diwali Sale 2023: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்கள் பல்வேறு பொருள்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கி வருகின்றனர். ஸ்மார்ட்போன், ஸ்மாட் டிவி, லேப்டாப் முதல் சின்னச் சின்ன பொருள்களுக்கும் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

அந்த வகையில், பிளிப்கார்ட் பிக் தீபாவளி தள்ளுபடி விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (Apple iPhone 14 Plus) அபரிமிதமான வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம். ஏனெனில் இது எப்போதும் இல்லாத அளவில் மிக குறைந்த விலையில் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. 

எப்படி இவ்வளவு தள்ளுபடி?

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் இந்தியாவில் 89 ஆயிரத்து 900 ரூபாய் என ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது மொத்தமாக 43 ஆயிரத்து 500 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை (Flipkart Big Diwali Sale 2023) செய்யப்படுகிறது. இதன்மூலம், ஐபோன் 14 பிளஸ் மொபைலை நீங்கள் வெறும் 20 ஆயிரத்து 400 ரூபாய்க்கு பெறலாம். 

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மொபைலானது பிளாப்கார்ட் விற்பனையில் 15 ஆயிரத்து 901 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு 63 ஆயிரத்து 999 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டு (SBI Credit Card) மூலம் மாதத் தவணை செலுத்தி வாங்க விரும்பினால் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

அதிரடி எக்ஸ்சேஞ் தள்ளுபடி

இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸின் விலை ரூ.62,499 ஆக குறையும். இது தவிர, வாங்குபவர்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு (Exchange Offer) ஈடாக ரூ.42,000 வரை தள்ளுபடி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் மூலம், வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸை பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் வெறும் 20 ஆயிரத்து 400 ரூபாய்க்கு பெறலாம்.

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ஐபோன் தொடரில் மினி மாடலுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இதனை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ஆப்பிள் ஐபோன் 14 போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது, மேலும், பெரிய டிஸ்ப்ளே மற்றும் சிறந்த பேட்டரியைக் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் இந்தியாவில் அடிப்படை மாடலுக்கு 89 ஆயிரத்து 900 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனம் இந்த மொபைலின் விலையில் 10 ஆயிரம் ரூபாயை குறைத்தது. ஐபோன் 14 பிளஸ் மொபைலின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம். 

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் நீலம், ஊதா, கருப்பு (Midnight), ஸ்டார்லைட் மற்றும் சிவப்பு உள்ளிட்ட 5 நிறங்களில் கிடைக்கிறது. இதில் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா XTR டிஸ்ப்ளே உள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் காணப்படுவது போல் மேம்படுத்தப்பட்ட A15 பயோனிக் சிப் மூலம் இந்த ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 

கேமராக்களைப் பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மொபைலில் 12MP பிரதான சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் 5ஜி திறன் கொண்டது மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை நீடிக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.