உலகில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 2025ல் 2.98 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர்., மதிப்பிட்டுள்ளது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயை தடுக்கலாம். புற்றுநோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சைக்கு அடித்தளமிட்டவர் பிரான்சின் மேரி கியூரி. 2 நோபல் பரிசு பெற்றவர். இவரது பிறந்த தினமான நவ. 7, மத்திய அரசு சார்பில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement