புதுடில்லி: 49 சதம் அடித்து சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை ஏன் வாழ்த்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் குஷால் மெண்டிஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நேற்று கோல்கட்டாவில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் சச்சின் (49) சாதனையை சமன் செய்தார். இதற்கு விராட் கோலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் வங்கதேசத்தை இலங்கை அணி எதிர்கொள்கிறது. இதற்காக பயிற்சியில் இலங்கை அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிருபர்களை சந்தித்த இலங்கை அணி கேப்டன் குஷால் மெண்டிசிடம், ‘ 49வது சதம் அடித்த விராட் கோலிக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்களா?’ என கேள்வி எழுப்பினர்.
அதற்கு குஷால் மெண்டிஸ், அவரை நான் ஏன் வாழ்த்த வேண்டும் எனக்கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement