சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ கடந்த மாதம் வெளியானது. லோகேஷின் LCU-ன் கீழ் உருவான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேநேரம், எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், லியோவில் வரும் விஜய்யின் ஆக்ஷன் காட்சியை ஜெயம் படத்தின் பாடலுடன் எடிட் செய்து கலாய்த்துள்ளனர்.
