புதுடில்லி: உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேச அணி.
வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன் எடுத்தது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று (நவ.,6) டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. இதில் ‛டாஸ்’ வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன் எடுத்தது. இலங்கை அணியின் அசலங்கா சதம் அடித்தார்(108). நிசங்கா மற்றும் சமரவிக்ரமா தலா 41 ரன்கள் சேர்த்தனர். தனஞ்சயா டி சில்வா 34 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் ஹசன் சகிப் 3 விக்கெட்டுகளையும் ஷோரிபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 280 ரன் வெற்றி இலக்காககொண்டு விளையாடிய வங்கதேச அணி 41.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் நஜ்முல் ஹூசைன் ஷான்டோ அதிகபட்சமாக 90 ரன்களும் ஷகிப் அல் ஹசன் 82 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement