சூரஜ்பூர்(சத்தீஸ்கர்): காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதமும், நக்சல் தீவிரவாதமும் வலுவடைவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள சூரஜ்பூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இன்று ஒட்டுமொத்த சத்தீஸ்கரும் பாஜகவின் பக்கம் நிற்கிறது. சத்தீஸ்கரில் இன்று முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மக்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் வாக்களித்து வருகிறார்கள்.