சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதற்கான முழு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தாம்பரம் நாகர்கோவில், நாகர்கோவில் மங்களூரு, சென்னை பெங்களுரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, வரும் 13ஆம் தேதி)திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. இதனால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், பயணிகள் வசதிக்காக தெற்கு […]
