பறிபோன ஐஏஎஸ் கனவு : 3 முறை தற்கொலைக்கு முயற்சித்த ரேகா நாயர்

பிரபல சின்னத்திரை நடிகையான ரேகா நாயர், ‛ஆண்டாள் அழகர், பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர்' ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், சமூக பிரச்னைகள் குறித்து பேசி சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ‛‛இளம் வயதிலேயே திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டதாகவும் அதற்காக டில்லி சென்றபோது அவரது கணவர் சான்றிதழ்களை கிழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரேகா நாயர் 3 முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும், தற்போது தன்னை நிரூபிக்கவே தொடர்ந்து நிறைய டிகிரிகள் படிக்கத் தொடங்கியதாகவும்,'' கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.