
மீண்டும் அஜித் படத்தை ரீமேக் செய்யும் சல்மான் கான்
பாலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் சல்மான் கான் பல வெற்றி படங்களில் நடித்தாலும் அவ்வப்போது ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித் நடித்திருந்த 'வீரம்' படத்தை ' ஹிந்தியில் 'கிஸி கி பாய் கிஸி கி ஜான்' என்கிற பெயரில் ரீமேக்கில் நடித்தார் இப்படம் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் மீண்டும் ஒரு அஜித் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, கடந்த 2015ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். சல்மான் கான் நடிக்கும் இந்த ரீமேக்கை கவுதம் மேனனே இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.