மைசூரு, : மைசூரில் மாடு மேய்த்து கொண்டிருந்த முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலரை, புலி தாக்கி கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரு மாவட்டம், சரகுரின் பி.மாடகேரே கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி நாயகா, 42. இவர், பி.மாடகேரே கிராம பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர்.
இக்கிராமம், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தின் மோளியூர் மண்டலத்தின் விளிம்பில் உள்ள பி.மாடகேரே – ஹொஸ்கோட் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
வழக்கம் போல் நேற்று பாலாஜி, தன் பண்ணையில், மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த புலி, அங்கிருந்த கால்நடைகளை தாக்கியது.
இதனால் அலறியடித்து கொண்டு மாடுகள் ஓடிவிட்டன. பண்ணையில் அமர்ந்திருந்த பாலாஜி நாயகாவை புலி தாக்கி, வனத்துக்குள் இழுத்து சென்றது. மாடுகள் அலறியடித்து கொண்டு ஓடியதை பார்த்த மற்றவர்கள், ஓடி வந்தனர்.
அப்போது பாலாஜி நாயகாவின் இடது கால், உடலின் சில பகுதிகள், தலையின் ஒரு பகுதியை புலி தின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினரை கண்டித்து கிராமத்தினர் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராமத்தினரை சமாதானப்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement