சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த நிகழ்ச்சியில் பாக்கியாவின் செயல்பாடுகள் சில நேரங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் பரபரப்பான எபிசோட்களால் இந்த தொடர் களைகட்டி வருகிறது. தன்னுடைய மகன்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களையும் நோக்கில் பாக்கியா செயல்பட்ட நிலையில், தற்போது செழியன் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
