வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நடிகை ராஷ்மிகா போலி வீடியோ விவகாரத்தையடுத்து சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து பரப்பப்பட்ட போலி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் வருத்தமடைந்ததாக ராஷ்மிகா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துடன் இதுபோன்ற விவகாரம் இனி நடக்காமல் இருக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
ஒருவரை போல இன்னொருவர் படம், வீடியோவை மாற்றி வெளியிடக்கூடாது. இத்தகைய விதிமீறலில் யாரும் ஈடுபடாமல் இருப்பதை சமூக வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும். மீறி போலி வீடியோ, புகைபடம் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
மேலும் புகைபடம், வீடியோ வெளியிட்டதாக விட்டதாக புகார் வந்தால் புகாரளித்த 36 மணிநேரத்திற்குள் புகைப்படம், வீடியோவை உடனே அகற்ற வேண்டும். இது போன்ற வழக்குகள் 2021 ஐடி விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போலி வீடியோவால் பாதிக்கப்படுபவர்கள், காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கைகளை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்து, தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகள், 2021 இன் கீழ் வழங்கப்பட்ட தீர்வுகளைப் பெறலாம் இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement