Putin has decided to run again in the 2024 presidential election | 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட புடின் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: 2024ல் நடக்கவுள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் ஆளும் சுதந்திர கட்சியை சேர்ந்த விளாடிமிர்புடின், 71 அதிபராக உள்ளார். கடந்த 1999ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகவே, தற்காலிக அதிபராக விளாடிமிர்புடின் பதவி ஏற்றார்.

ஆட்சி அதிகாரம் தன் கையில் வந்துவிட்டதையடுத்து 2000-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, ரஷ்ய அதிபரானார் அப்போது நான்கு ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைமுறை விதியை ஆறு ஆண்டுக்கு ஒரு முறை என மாற்றினார். தொடர்ந்து 2012, 2018ம் ஆண்டுகளில் நடந்த அதிபர் தேர்தலிலும் புடினே வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடு செய்து தான் புடின் வெற்றிபெற்றார் என ரஷ்ய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் புடினின் அதிபர் பதவிகாலம் நிறைவடைகிறது. இதையடுத்து 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட புடின் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 6 -வது முறையாக அதிபராக பதவியேற்று 2030 வரை அதிபராக புடின் தொடர்வார் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.