RE Himalayan 450 bookings open – புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் முன்பதிவு துவங்கியது – EICMA 2023

அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராயல் என்ஃபீஃடு ஹிமாலயன் 450 பைக் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறுகின்ற EICMA 2023 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக 452cc லிக்யூடு கூல்டு என்ஜினை தயாரித்துள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்த என்ஜினுக்கு செர்பா 450 என்ற பெயை சூட்டியுள்ளது. ஹிமாலயன் பைக் தவிர எலக்ட்ரிக் ஹிமாலயன் அறிமுகம் செய்யப்படுள்ளது.

New Royal Enfield Himalayan

புதிய செர்பா 450 என்ஜினை பெறுகின்ற முதல் மாடலான ஹிமாலயன் பைக்கில் 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000rpm-ல் 39.5 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் 42 மிமீ திராட்டிள் பாடி எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ரைட் பை வயர் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

காமெட் வெள்ளை, ஸ்லேட் பாப்பி ப்ளூ, ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், கஷா பிரவுன் மற்றும் ஹன்லே பிளாக் என 5 நிறங்களை பெறுகின்றது.

ஹிமாலயன் 452 பெறுகின்ற பைக்கில் ஸ்டீல் ட்வின் ஸ்பார் டீயூப்லெர் சேஸ் உடன் ஷோவா 43மிமீ USD ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் லிங்க்-டைப் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் பெற்று இரு பக்கமும் உள்ள சஸ்பென்ஷன் ஆனது 200 மிமீ வீல் டிராவல் அனுமதிக்கின்றது. மிக தீவிரமான ஆஃப் ரோடு சாகங்களுக்கு ஏற்ற 230 மிமீ  கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

இன்றைக்கு முன்பதிவு துவங்கப்படுகின்ற ஹிமாலயன் பைக்கிற்கு வரும் நவம்பர் 24 ஆம் தேதி துவங்க உள்ள மோட்டோவெர்ஸ் அரங்கில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. சர்வதேச சந்தையில் 2024 முதல் கிடைக்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.