பெங்களூரு : ‘கிரிஹ லட்சுமி’ திட்டத்தின் பணம் சரியாக வரவில்லை என்று தங்களை தொடர்பு கொண்ட துணை முதல்வர் சிவகுமாரிடம் பயனாளிகள் குறை கூறினர்.
கர்நாடகாவில், ‘கிரஹ ஜோதி, கிரஹ லட்சுமி, சக்தி, அன்னபாக்யா’ ஆகிய நான்கு திட்டங்களை காங்கிரஸ் அரசு அமல்படுத்தி உள்ளது.
அமலுக்கு வந்து மாத கணக்கில் ஆனாலும், பலருக்கு இதுவரை சென்றடையவில்லை. சிலர் பயனடைந்திருந்தாலும் பல்வேறு குறைகள் இருப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குறுதி திட்ட கால் சென்டருக்கு, துணை முதல்வர் சிவகுமார், நேற்று மாலை திடீரென வந்தார். சில பயனாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தங்களுக்கு, ‘கிரஹ லட்சுமி’ திட்டத்தின் பணம் சரியாக வரவில்லை என்று கூறினர்.
இதை கேட்ட சிவகுமார், பிரச்னையை விரைவில் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். கால் சென்டருக்கு துணை முதல்வர் திடீரென வந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement