மாண்டியா : கார் கண்ணாடியை உடைத்து, 4.50 லட்சம் ரூபாயை திருடி சென்ற இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
மாண்டியா, பாண்டவபுராவின், சினகுரலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஷ். இவர் சொந்த தேவைக்காக, பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இதை அடைப்பதற்காக, தன் நிலத்தின் ஒரு பகுதியை விற்றார்.
நேற்று மதியம் மாண்டியாவின், துணை பதிவாளர் அலுவலகத்தில், நிலத்தை பதிவு செய்து கொடுத்து, 4.50 லட்சம் ரூபாயை பெற்றார்.
நகராட்சி அலுவலகத்தில், தனிப்பட்ட பணி இருந்ததால், பணத்தை காரில் வைத்துவிட்டு, நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு வேலையை முடித்துக்கொண்டு, அலுவலகம் அருகில் இருந்த வங்கிக்கு சென்றார். இதை நோட்டம் விட்ட மர்ம கும்பல், கார் கண்ணாடியை உடைத்து, பணத்தை திருடி சென்றது.
சிறிது நேரத்துக்கு பின், திரும்பி வந்து பார்த்த போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, பணம் பறிபோனதை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
அங்கு வந்த போலீசார், நகராட்சி வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, ஸ்கூட்டரில் வந்த இரண்டு முகமுடி நபர்கள், கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடியது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement