Yamaha MT-09 SP – புதிய வசதிகளுடன் 2024 யமஹா எம்டி-09 எஸ்பி பைக் அறிமுகமானது

சமீபத்தில் யமஹா வெளியிட்டிருந்த 2024 யமஹா MT-09 பைக்கினை தொடர்ந்து கூடுதல் வசதிகள் மற்றும் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்ற டிராக்கிற்கு ஏற்ற எலக்ட்ரானிக் கிட் பெற்ற யமஹா MT-09 SP மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கு யமஹா எம்-09 பைக் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் எஸ்பி பீரிமியம் மாடல் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே ஆகும்.

 2024 Yamaha MT-09 SP

MT-09 SP பைக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய DLC பூசப்பட்ட 41mm KYB முன் ஃபோர்க்குகளுடன் பின்பக்கத்தில் ரிமோட் ப்ரீ-லோட் அட்ஜஸ்டருடன் ஓஹ்லின்ஸ் மோனோஷாக் உள்ளது. முன்பக்கத்தில் பிரெம்போ ஸ்டைல்மா காலிப்பர்கள் டூயல் 298mm டிஸ்க் பிரேக்குடன் பின்பக்கத்தில் பிரெம்போ ரேடியல் மாஸ்டர் சிலிண்டரும் 245mm டிஸ்க்குகளுடன் சிவிட்சபிள் ஏபிஎஸ் உடன் வருகிறது.

ஸ்போர்ட், ரெயின் மற்றும் ஸ்டீரிட் என மூன்று ரைடிங் மோடுகளுடன் SP இரண்டு தனிப்பயன் ரைடர் முறைகளையும் மற்றும் நான்கு பிரத்தியேக ட்ராக் ரைடிங் முறைகள் கொண்டுள்ளது.  5-இன்ச் TFT டிஸ்ப்ளேயில் ஒரு முக்கிய லேப்-டைமரைக் கொண்டிருக்கும் ட்ராக் தீமுடன் வருகின்றன. தனிப்பயனாக்கக்கூடிய ட்ராக் முறைகள் இரண்டு அமைப்புகள் மற்றும் Yamaha Ride Control மூலம் பிரேக் கண்ட்ரோல் (BC) மூலம் என்ஜின் பிரேக் மேனேஜ்மென்ட் (EBM) ட்யூனிங் செய்ய அனுமதிக்கின்றன.

2024-yamaha-mt-09-sp-unveiled

முதன்முறையாக யமஹா MT பைக்கில் ஸ்மார்ட் கீ சிஸ்டத்துடன் வருகின்ற மாடலில் ஸ்டார்ட் செய்ய மற்றும் சுவிட்சை ஒரு எளிய ஃபிளிக் மூலம் இயந்திரத்தைத் தொடங்க இந்த கீ ஃபோப் உதவுகிறது.கூடுதல் வசதியாக கீ ஃபோப் மூலம் எரிபொருள் மூடியையும் திறக்கலாம் மற்றும் பூட்டலாம்.

யமஹா MT-09 பைக்கில் உள்ளதை போலவே SP மாடலிலும் 890cc, CP3, மூன்று சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக10,000rpm-ல் 117.3bhp பவர் மற்றும் 7,000rpm-ல் 93Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.