ஆப்கானிஸ்தான்: மினிபஸ்சில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி

காபுல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று மாலை மின்பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 27 பேர் பயணித்தனர்.

டேஷ்-இ பர்ஷி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மினிபஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.