உளவு பார்க்கும் செயலிகளை கண்டுபிடித்து கொடுக்கும் செயலி..! மக்களே தெரிஞ்சுக்கோங்க

நிச்சயமாக, ஸ்மார்ட்போன்கள் முன்பை விட பாதுகாப்பாக இருக்கின்றன. ஏனென்றால் சிறந்த பிரைவசி பாலிசியை வழங்குகின்றன. இருந்தபோதிலும் அவை ஆபத்தான வைரஸ்களில் இருந்து உங்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை. பல செயலிகளுடன் ஆபத்தான வைரஸ்கள் உங்கள் தொலைபேசியை அடைந்து மொபைலுக்குள் மறைந்திருக்கும். இந்த மால்வேர் மூலம், பயனர்கள் பாதிக்கப்படலாம். அவர்களின் தனிப்பட்ட தரவுகளும் திருடப்படலாம். இது போன்ற மால்வேர் உங்கள் போனில் இருக்கலாம். அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

தெரியாத இணைப்பைக் (Links) கிளிக் செய்வது அல்லது அங்கீகரிக்கப்படாத இணைய பக்கங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்குவது போன்ற தவறுகள் உங்கள் மொபைலுக்குள் ஆபத்தான வைரஸ்கள் நுழைய வாய்ப்பாக அமைந்துவிடும். பல நேரங்களில், சில செயலிகள் நிறுவிய பின் கூட செயலிகள் பக்கத்தில் தெரிவதில்லை. இதனால் அவற்றை இன்ஸ்டால் செய்ய முடியாது. நீக்கலாம் என்றால் கூட அந்த செயலிகள் எங்கிருக்கிறது என்று பயனர்களால் கண்டுபிடிக்க முடியாது. இத்தகைய செயலிகள் தீங்குவிளைவிக்கும் வைரஸ்கர்கள் மற்றும் உளவு பார்க்கக்கூடியவை. 

அப்படியான சமயத்தில் உங்கள் தொலைபேசியிலிருந்து வைரஸ் மற்றும் ஆபத்தான செயலிகளை அகற்ற, நீங்கள் சிறப்பு செயலிகளின் உதவியைப் பெற வேண்டும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று இந்தக் கருவிகளை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். எடுத்துக்காட்டாக, Malwarebytes பிரபலமான கருவிகளில் ஒன்றாகும். இது தீங்கிழைக்கும் செயலிகளை எளிதாக அகற்ற பயன்படுத்தலாம். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் ஆபத்தான செயலிகளை அது எவ்வாறு கண்டறிகிறது என்பதை பார்க்கலாம்.

– முதலில் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று மால்வேர்பைட்ஸ் அல்லது அதுபோன்ற ஏதேனும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
– இதனை மொபைலில் நிறுவியபிறகு, சாதனங்களில் உள்ள குறைபாடுகள் பற்றிய தகவல் உங்களுக்கு வழங்கப்படும், மேலும் நீங்கள் செட்டிங்ஸில் மாற்றங்களைச் செய்ய முடியும்.
– இது தவிர, சாதனத்தில் இருக்கும் செயலிகளை ஸ்கேன் செய்யும் விருப்பத்தைப் பெறுவீர்கள்.
– ஸ்கேன் நவ் என்பதைத் தட்டுவதன் மூலம் நீங்கள் சாதனத்தை ஸ்கேன் செய்ய முடியும். இந்த ஆப்ஸ் நீங்கள் வெளியே பார்க்காத செயலிகளையும் ஸ்கேன் செய்யும்.

எல்லா பயன்பாடுகளையும் ஸ்கேன் செய்த பிறகு, வைரஸ் மற்றும் ஆபத்தான செயலிகளை தானாகவே நீக்கப்பட்டு, அதைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும். நல்ல விஷயம் என்னவென்றால், வைரஸை அகற்றும் செயல்பாட்டில், உங்கள் முக்கியமான தரவு அல்லது பயன்பாடுகள் எதுவும் நீக்கப்படாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.