இலங்கை பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுதல் மற்றும் இலங்கையின் புதிய ஏற்றுமதிச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது (7) அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முன்னேற்றத்திற்கு மிகவும் பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கான பலமான பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பன ஒன்றிணைந்து புதிய நிறுவனம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஜனவரி 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுளனது.
இதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணத்துவத்துவமிக்க நபர்களுக்கு ஏற்றவாறு மற்றும் இறக்குமதி தொடர்பான பரீட்சார்த்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வரலாறு முழுவதும் நாட்டிற்கு வருடாந்தம் மிகக் குறைந்த அளவிலேயே வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்பதாகவும், மேலும் அயல்நாடுகள் அனைத்தும் வருடத்திற்கு 80 மில்லியனில் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சராசரியாக வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இவற்றைக் கருத்தில் கொண்டு நாட்டின் தற்போதைய நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, புதிய முதலீட்டு மற்றும் ஏற்றுமதி முன்னேற்றத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் இலங்கை பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுதல் என்பவற்றுக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.