முடியப்போகுது விற்பனை… 70 சதவீத தள்ளுபடியில் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்!

Amazon Sale 2023: தீப ஒளித் திருநாள் நாடு முழுவதும் வரும் நவ.12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு புத்தாடையில் தொடங்கி வீட்டுக்கு தேவையான உபகரணங்கள்; வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற மின்னணு சாதனங்கள்; கார், பைக் போன்ற வாகனங்கள் என இந்த நேரத்தில் மக்கள் வாங்க நினைப்பார்கள். எனவே, தான் தீபாவளியை ஒட்டிய இந்த பண்டிகை காலங்களில் பல இடங்களில் அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.  

இந்த காலகட்டத்தில் தீபாவளி கொண்டாட்டங்களும் பல விதத்தில் மாறிவிட்டது எனலாம். தீபாவளி அன்று இரவு பார்ட்டி வைப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. நண்பர்கள், உறவினர், சுற்றத்தார்கள், உடன் வேலை செய்பவர்கள் என பல்வேறு தரப்பு விருந்திருனர்களுடன் வகை வகையான உணவுகளுடனும் தீபாவளி இரவை கழிக்க பார்ட்டிகளை பலர் திட்டமிடுகின்றனர்.

அமேசானில் 70 சதவீத தள்ளுபடி

அந்த வகையில், பார்டிகளில் பாடல்கள் தெளிவாகவும், சத்தமாகவும், தரமாகவும் படித்தால் மட்டுமே உங்கள் தீபாவளி விருந்துக்கான சரியான சூழலை உருவாக்க இயலும். அதற்கு ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உதவிகரமாக இருக்கும். உங்களிடம் புளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth Speaker) இல்லையென்றால் அல்லது விருந்துக்கு போதுமான ஸ்பீக்கர்கள் இல்லையென்றால், அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும் இந்த சிறந்த பிராண்டுகளின் புளூடூத் ஸ்பீக்கர்களில் 70 சதவீதம் வரை சலுகைகள் உள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை (Amazon Great Indian Festival Sale 2023) வரும் நவ. 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் கீழ்காணும் ஸ்பீக்கர்களை உடனடியாக விரைந்து வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். 

Tribit Smart Speaker 

இந்த ஸ்பீக்கரில் பாஸ் ரேடியேட்டர்கள் மற்றும் இரட்டை 8W பவர் டிரைவர்கள் உள்ளன. இது தெளிவான மற்றும் தடையற்ற தரமான வெளியீட்டை வழங்குகிறது. இது புளூடூத் 5.0-ஐ ஆதரிக்கிறது மற்றும் 100 அடி தூரம் வரை உள்ள சாதனத்துடன் இது இணையும். இது 24 மணிநேர பிளேபேக் டைம்மை வழங்குகிறது. இது உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் வாட்டர் ரெசிஸ்டண்ட்டை கொண்டுள்ளது. அமேசானில் 2,499 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.

Portronics Breeze Plus

இந்த ஸ்பீக்கரில் உள்ளமைக்கப்பட்ட 20W ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு, தரமான பேஸுடன் தெளிவான மற்றும் நிதானமான ஒலி வெளியீட்டை உருவாக்குகிறது. இது 2,500mAh பேட்டரி மூலம் ஏழு மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் மற்றும் AUX உடன் இரட்டை இணைப்பையும் கொண்டுள்ளது. IPx6 வாட்டர் ரெசிஸ்டண்ட் தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்பட்ட இந்த சாதனம் Amazon நிறுவனத்தில் 1,849 ரூபாயில் கிடைக்கிறது.

boAt Stone 1000

இது ப்ளூடூத் V5.1 இணைப்புடன் கூடிய 14W சக்திவாய்ந்த ஸ்பீக்கர். இது கனமான 3,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது முழுமையான சார்ஜில் எட்டு மணிநேரம் வரை தொடர்ந்து செயலாற்றும். இது தூசி மற்றும் தண்ணீருக்கு எதிரான பாதுகாப்பிற்காக IPX5-ஆல் பாதுகாக்கப்பட்டுள்ளது. வால்யூம், டிராக்குகள், இசையை இயக்க/இடைநிறுத்துதல் போன்றவற்றை எளிதாக மாற்றுவதற்கு இது ஒருங்கிணைந்த பட்டன்களுடன் வருகிறது. இப்போது, அமேசானில் 2,299 ரூபாய்க்கு ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகிறது.

Mivi Roam 2 

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் அதன் கூர்மையான ட்ரெபிள்கள், விரிவான மிட்ஸ் ஆகியவற்றின் காரணமாக சிறிய அளவில் பெரிய அளவிலான தரத்தை தரும் ஸ்பீக்கராக செயல்படுகிறது. இது ஒரே சார்ஜில் 24 மணி நேரம் வரை தொடர்ந்து செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இதில் 2,000mAh பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அமேசானில் இது உங்களுக்கு தள்ளுபடி விலையில் 899 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

Infinity – JBL Fuze 100

இது ஒரு சிறிய வடிவமைப்புடன் கூடிய ஸ்பீக்கர் ஆகும். இது ஒன்பது மணிநேர பிளேயிங் டைம் வசதியை வழங்குகிறது மற்றும் இது சாதாரண மற்றும் ஆழமான பாஸ் வெளியீட்டிற்கான இரட்டை சமநிலை முறைகளைக் கொண்டுள்ளது. இப்போது நீங்கள் அதன் இரட்டை ஸ்பீக்கர் இணைப்பு தொழில்நுட்பத்துடன் இரண்டு Infinity Fuze 100 ஸ்பீக்கர்களை இணைக்கலாம். அமேசானில் இது தள்ளுபடியில் 1,499 ரூபாய்க்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க | ஒரே இரவில் உருகிய ஐபோன் 15 ப்ரோ… திடுக்கிட்டு எழுந்த பயனர் – என்ன பிரச்னை!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.