புதுடில்லி:ஒப்பந்த ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கும் டில்லி மாநகராட்சிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
டில்லி மாநகராட்சியை படிப்படியாக சீர்படுத்தி வருகிறோம். டில்லி மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்களுக்கும், தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்குகிறது. இது மிகவும் பாராட்டுக்குரிய செயல்.
துப்புரவுத் தொழிலாளர்களை எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக நாங்கள் கருதுகிறோம். ஆம் ஆத்மி பொறுப்பேற்ற பிறகுதான் மாநகராட்சி ஊழியர்களுக்கு முதல் தேதியில் சம்பளம் கிடைக்கிறது. இதற்கு முன், ஒவ்வொரு மாதமும் சம்பளத்துக்காக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் 14 ஆண்டுகளுக்குப் பின், இப்போதுதான் அவர்கள் முதல் தேதியில் சம்பளம் வாங்குகின்றனர்.
தீபாவளி போனஸ் பணத்தில், தொழிலாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்க வேண்டும். தீபாவளிக்கு கெஜ்ரிவால் பரிசு கொடுத்து இருப்பதாக உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லுங்கள்.
உங்கள் சகோதரர் கெஜ்ரிவால் இருக்கும் வரை, மாநகராட்சி ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சியின் அனைத்து ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என மேயர் ஷெல்லி ஓபராய் நேற்று அறிவித்தார்.
முன்னதாக நிருபர்களிடன் பேசிய ஓபராய், “கடந்த மூன்று ஆண்டுகளில் 240 நாட்கள் வேலை செய்த தினக்கூலி தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கப்படும்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ஒப்பந்த ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்குகிறது,”என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement