ஸ்டன்ட் சாகசங்களுக்கு ஏற்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2.5R Xtunt கான்செப்ட் ஆனது விற்பனையில் உள்ள கரீஸ்மா XMR பைக்கின் அடிப்படையில் EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
210cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 25 hp பவரை வெளிப்படுத்துகின்ற கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் என்ஜின் சேஸ் உட்பட பல்வேறு பாகங்களை 2.5R ஸ்டன்ட் பகிர்ந்து கொள்ளுகின்றது.
Hero 2.5R Xtunt Concept
சில ஆண்டுகளுக்கு முன்னர் எக்ஸ்ட்ரீம் 1R கான்செப்ட் வெளியிடப்பட்டு பிறகு எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விற்பனையில் உள்ள நிலையில், தற்பொழுது காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2.5R Xtunt கான்செப்ட் நேரடியாக உற்பத்திக்கு செல்லாமல் அதன் அடிப்படையில் நேக்டூ ஸ்டீரிட் எக்ஸ்ட்ரீம் 210R விற்பனைக்கு வரக்கூடும் அல்லது புதிய 2.5ஆர் ஸ்டன்ட் உற்பத்தி நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி போர்க், பிரெம்போ மோனோபிளாக் முன் பிரேக்கிங் காலிபர், காஸ்ட் அலுமினியம் ஸ்விங்கார்ம் மற்றும் ஸ்லிக் டயர் கொண்டதாக உள்ளது.
EICMA 2023-ல் ஹீரோ 2.5R Xtunt தவிர ஹீரோ ஜூம் 125ஆர், ஜூம் 160 மற்றும் விடா எலக்ட்ரிக் டர்ட் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.