வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தொடர்பான தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆகம விதிகளுக்கு முரணாக நியமிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆகம விதிகளை கடைப்பிடிக்கும் கோயில்களில் வழக்குகளை காரணம் காட்டி அர்ச்சகர் நியமனத்தை நிறுத்தக்கூடாது. தமிழகம் சார்ந்த விவகாரம் என்பதால் முழு விவரம் தெரிந்த உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்.
ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க அரசை அனுமதிக்க வேண்டும். அரசு வெளியிட்ட அரசாணை, அர்ச்சகர் பயிற்சிக்கானதே தவிர அர்ச்சகர் நியமனத்திற்கானது அல்ல. என வாதிடப்பட்டது.
இதனையடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் எதன் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்கிறீர்கள்? அவர்களுக்கான தகுதி என்ன? அர்ச்சகர்கள் நியமனங்கள் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்க மாட்டோம்.
நியமனங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடப்பதை தகவலாக தமிழக அரசு தெரிவிக்கலாம். எனக்கூறி வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யவும் மறுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement