வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து நடந்த ஆலோசனைக்கு பின் இன்று வெளியான செய்தியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிச.4 முதல் 22-ம் தேதி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இக்கூட்டத்தொடரில் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரம் சி.ஆர்.பி.சி., ஐ.பி.சி., ஐ.இ.ஏ., ஆகிய குற்றவியல் விசாரணை முறை சட்டதிருத்த மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement