சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே பொங்கல் தினத்தில் லால் சலாம், அயலான் திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு மாற்றப்பட்டது குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.
