புதுடில்லி:தீபாவளி பண்டிகையன்று டில்லி மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் முன்னதாக நிறைவடைகிறது.
புதுடில்லியில் மெட்ரோ ரயில் சேவை காலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 11:00 மணிக்கு அனைத்து தடங்களிலும் கடைசி ரயில் புறப்படுகிறது. அதேநேரத்தில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் தடத்தில் மட்டும் அதிகாலை 4:45 மணிக்கே ரயில் சேவை துவங்குகிறது.
தீபாவளி பண்டிகையான வரும் 12ம் தேதி காலையில் வழக்கம் போல் துவங்கும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11:00 மணிக்குப் பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக 10:00 மணிக்கே நிறைவடைகிறது.
அன்று இரவு 10:00 மணிக்கு அனைத்து வழித் தடங்களிலும் கடைசி ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement