இனி இந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் ரோகித் சர்மா தான் – கெயில், ஏபிடி சாதனைகள் முறியடிப்பு

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 2015 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் செய்த சாதனையை முறியடித்துள்ளார். ஒரு கிரிக்கெட் காலண்டர் ஆண்டில் 58 சிக்சர்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதனை செய்தவர் ஏபி டிவில்லியர்ஸ். ஆனால் இந்த காலண்டர் ஆண்டில் 59 சிக்சர்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்திருகிறார் கேப்டன் ரோகித் சர்மா.

 November 12, 2023

இதற்கு முன்பு இந்த சாதனை பட்டியலில் 56 சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெயில் மற்றும் 48 சிக்சர்கள் அடித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி ஆகியோர் இருந்தனர். அவர்களின் சாதனையை முறியடித்து தான் டிவில்லியர்ஸ் முதல் இடத்துக்கு வந்த நிலையில், இப்போது ரோகித் இந்த சாதனையில் முதல் இடத்தில் அமர்ந்திருக்கிறார். மேலும், உலக கோப்பையில் ஒரு கேப்டனாக சிக்சர்கள் மூலம் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் ரோகித் சர்மா வசம் வந்திருக்கிறது.

 November 12, 2023

இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சிக்சர்கள் மூலம் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை படைத்திருந்தார். இப்போது அந்த  சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு உலக கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற பெருமையும் ரோகித் சர்மா வசம் வந்திருக்கிறது. 

நடப்பு உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா இதுவரை 23 சிக்சர்கள் அடித்திருக்கிறார். இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த இயான் மோர்கன் 22 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இப்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் மோர்கனுக்கு அடுத்த இடத்தில் ஆரோன் பின்ச், பிரண்டன் மெக்கலம் ஆகியோர் இருக்கின்றனர்.

 November 12, 2023

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் விளையாடுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சுப்மான் கில்லுடன் ஓப்பனிங் களமிறங்கிய அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்துகளை எதிர்கொண்ட அவர் 61 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.