
கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல கட்டமாக தாய்லாந்து, சென்னை, கோவா, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது வந்தது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தை அடுத்த வருடம் 2024 ஏப்ரல் 11ம் தேதி அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.