டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்க பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 40 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா- தண்டல்கான் இடையில் சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரம்மக்கல்- யமுனோரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த பாதை உள்ளது. இதில் கட்டுமான பணியில் பலர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டது. 40 பேர் சிக்கியுள்ளனர். மாவட்ட உயர் அதிகாரிகள் , தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement