Comet Devil is a wonder in the sky | வருகிறது டெவில் வால் நட்சத்திரம் வானில் ஒரு அதிசயம்

அடுத்தாண்டு ஜூன் 2ல் வால்நட்சத்திரம் பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதை வெறும் கண்களால், பைனாகுலரில் பார்க்கலாம்.

இந்த வால்நட்சத்திரம் முதலில் 1812 ஜூலை 12ல் பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் லுாயிஸ் பான்ஸ்சால் கண்டு பிடிக்கப்பட்டது. பின் 1883ல் அமெரிக்காவின் வில்லியம் ராபர்ட் ப்ரூக்ஸ்சால் மீண்டும் கண்டறியப்பட்டது. இதற்கு ’12பி/பான்ஸ் – ப்ரூக்’ என இவர்களது பெயர் சூட்டப்பட்டது. இது 71.32 ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்கிறது. மணிக்கு 1600 கி.மீ., வேகத்தில் சுற்றிவரும்.

இதிலிருந்து 2023 அக். 31ல் வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் இதிலிருந்து ஒளி பிரகாசிக்கும். இதன்படி அடுத்தாண்டு ஏப். 8ல் சூரிய கிரகணம் ஏற்படும். அப்போது 25 டிகிரி கோணத்தில் இருக்கும் இந்த வால் நட்சத்திரம் ஏப். 21ல் சூரியனை அருகில் கடந்து செல்லும் அடுத்து 42 நாட்களுக்கு பின் பூமிக்கு அருகில் கடந்து செல்லும். அப்போது பூமியில் இருந்து 23.2 கோடி கி.மீ., துாரத்தில் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் வாலின் விட்டம் 29 கி.மீ., இருக்கும். இது உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை விட

மூன்று மடங்கு பெரியது. இதன் ‘ராட்சத’ அளவு காரணமாக இதற்கு ‘டெவில்’ எனவும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.இதற்கு முன் இந்த வால் நட்சத்திரம் 1952 மே 22ல் பூமிக்கு அருகில் வந்து சென்றது. அடுத்து 2095ல் தான் பூமியை நெருங்கி வரும்.

வால் தோன்றுவது எப்படி

வால்நட்சத்திரம் என்பது விண்வெளியில் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் துாசி, கற்கள், வாயுக்கள், பனிக்கட்டிகளால் ஆன கலவை. ‘காமெட்’ என்றால் கிரேக்க மொழியில் ‘முடி’ என பெயர். இதில் உள்ள நீண்ட வால், தலைமுடி போல இருப்பதால் ‘காமெட்’ என பெயரிட்டனர். இது சூரியனுக்கு அருகில் வரும்போது, சூரிய ஒளியால் பிரகாசமான வால் போல மாறுகிறது. இதன் அகலம் அதிகபட்சம் 20 கி.மீ, இருக்கும்.

எத்தனை வகை

இதுவரை 3650 வால் நட்சத்திரங்கள் கண்டறியப் பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சூரியனை சுற்றும் காலம் வேறுபடும். சில ஆண்டுக்கு / சில 20 — 200 ஆண்டு / சில 60,000 ஆண்டுக்கு ஒரு முறை, சில வாழ்நாளில் ஒரு முறை மட்டும் சூரியனை சுற்றி விட்டு செல்லும். இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

முதல் கண்டுபிடிப்பு

உலகில் வால்நட்சத்திரத்தை முதலில் (1786) கண்டறிந்தவர் ஜெர்மனியின் பெண் விஞ்ஞானி கரோலின் ஹெர்ச்சல். பின் 1680ல் தொலைநோக்கி மூலம் பார்த்தவர் ஜெர்மனியின் காட்பிரைட் கிர்ச். முதலில் புகைப்படம் எடுத்தவர் அமெரிக்காவின் எட்வர்ட் எமர்சன் பெர்னார்ட்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.