வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: குஜராத்தில் சாலையோர ஏழைகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே தீபாவளி பரிசு வழங்கி அசத்தி உள்ளார் ஆப்கன் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்.
இந்தியாவில் தற்போது உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில்கலந்து கொள்வற்காக பல்வேறு நாடுகள் இந்தியா வந்துள்ளது. அவற்றுள் ஒன்று ஆப்கானிஸ்தான். ஒன்பது போட்டிகளில் விளையாடி உள்ள இந்த அணி நான்கு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்து அந்த அணி நாடு திரும்ப துவங்கி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆப்கன் அணியை சேர்ந்த வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் செய்த அசத்தலான செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஆப்கன் வீரர் குர்பாஸ் நள்ளிரவில் சாலையோரம் தங்கி உள்ளவர்கள் படுத்து உறங்கும் நேரத்தில் அவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை அவர்களிடத்தில் வைத்து செல்கிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
எந்த ஒரு பண்டிகை கொண்டாட்டங்களும் மதங்களை கடந்து அன்பை போற்றுவது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement