சென்னை: தீபாவளி 2023 களைகட்ட தொடங்கியுள்ளது. இளம் நடிகைகள் முதல் சீனியர் நடிகைகள் என பல பிரபலங்களும் தீபாவளி மோடுக்கு மாறி உள்ளனர். அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். நடிகை குஷ்புவின் அவ்னி இல்லம் மின் விளக்குகள் தங்க கோட்டை போல ஜொலி ஜொக்கும் புகைப்படங்கள் அதிக லைக்குகளை அள்ளி வருகின்றன.
