பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இன்றி, கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே களமிறங்குகின்றனர். இன்றைய போட்டியிலும் இந்திய அணி வென்று தீபாவளி தினத்திலும் முத்திரை பதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி விபரம்:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ், லோகேஷ் ராகுல், சூர்யகுமார், ரவிந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement