வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி!

கோவையில் வெடிகுண்டு வெடிக்கும் என வந்த மின்னஞ்சல் வதந்தியால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் கோவை மாநகர ஆணையர், “கோவையில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் ஒன்று வந்தது. அது தொடர்பாக விசாரித்தபோது, அது வதந்தி என்பது தெரியவந்தது. அதனால், தனிப்பட்ட முறையில் காவல்துறை பாதுகாப்பு அதிகப்படுத்தவில்லை. தீபாவளிக்கு வழக்கமாக வழங்கக்கூடிய பாதுகாப்பை மட்டுமே அதிகரித்திருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
`மகிழ்ச்சியும் செழிப்பும் ஆரோக்கியமும் வந்து சேரட்டும்!’ – பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளை, நாட்டு மக்களிடம் பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “தீப ஒளித் திருநாளான இன்று அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் ஆரோக்கியமும் வந்து சேரட்டும்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.