சென்னை திருவள்ளூர் சாலையில் உள்ளது புட்லூர்-ராமபுரம். சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 38 கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது. இங்குதான் பிள்ளை வரம் கர்ப்பிணித் திருவுருவில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீபூங்காவனத்தம்மன் எனும் அங்காளம்மன்.
புற்று வடிவத்தில் அம்மன் காட்சி தருவது அபூர்வம் என்கிறார்கள் பக்தர்கள். அதிலும் நிறைமாத கர்ப்பிணியாக மல்லாந்து படுத்தபடி காட்சி தருகிறாள் இந்த பூங்காவனத்து அம்மன். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியே, கர்ப்பிணிப் பெண்ணாக பூங்காவனம் என்ற பெண் உருவம் கொண்டு, ஈசனுடன் வந்து கோயில்கொண்ட தலம் இது என்கிறார்கள் ஆலய நிர்வாகத்தினர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புட்லூரை அடுத்துள்ள ராமபுரம் வயல் வெளியாக இருந்தது. அப்போது மேல்மலையனூரில் இருந்து நிறைமாத கர்ப்பிணியை அழைத்துக் கொண்டு இங்கு நடந்து வந்தார் ஒருவர். அப்போது அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு தாகம் எடுத்தது. அவள் கணவன் நீர் எடுக்க குசஸ்தலை ஆற்றுக்குச் சென்றார்.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
ஆற்றைக் கடந்து நல்ல தண்ணீரை எடுத்துக் கொண்டு திரும்பினார். அப்போது, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சில மணிநேரம் கழித்து வெள்ளம் குறைந்ததும், ஆற்றைக் கடந்தார். அங்கே காத்திருந்த மனைவியைத் தேடி ஓடினார். ஆச்சர்யம்…அங்கே நிறைமாத கர்ப்பிணிப் பெண் புற்றுருவமாகக் கிடந்தார். அங்கே தங்கிவிட அம்மன் ஆடிய லீலையே அது. ஆம், மலையனூரில் இருந்தவள், இங்கிருக்கும் பக்தர்களுக்கு அருள் செய்யவும் ஈசனோடு வந்து இங்கே புற்றுருவில் கோயில் கொண்டாள்.

காலங்கள் ஓடின. ஒரு மூதாட்டியின் அருள் வாக்கில் அன்னை வெளிப்பட்டாள். ‘அங்காளபரமேஸ்வரியான நான் இந்த இடத்துல புற்றுருவமா கிடக்கிறேன். இங்கே கோயில் கட்டி, என்னைக் கும்பிடுங்க. எல்லோரையும் வாழ வைப்பேன்’’ என்றாள். அதன்படி ஆலயம் எழும்பியது. இன்றும் பூங்காவனத்தம்மன் தான் சொன்னபடி இங்கு வந்து வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டிய வரத்தைக் கொடுத்தபடியே இருக்கிறார்.
குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டுவோர், எலுமிச்சம் பழம் மற்றும் தொட்டிலை எடுத்து வந்து, கோயிலின் உள்ளே இடப்புறத்தில் புற்றுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில் கட்டிவிட்டுப் பிரார்த்திக்கிறார்கள். திருமணப் பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், வேப்பமரத்தில் மஞ்சள் சரடை கட்டி, வேண்டிக் கொள்கிறார்கள்.
மற்ற எந்த வேண்டுதல் என்றாலும் சரி, மூன்று எலுமிச்சம் பழங்களோடு சென்றால் போதும். நிறைவேறிவிடும் என்கிறார்கள் இவள் பக்தர்கள். எலுமிச்சம் பழங்களை கோயிலை வலம் வந்த பிறகு பூங்காவனத்து அம்மனின் பாதங்களில் வைத்துவிட்டு, பெண்கள் புடவை முந்தானையை ஏந்திப் பிடித்தபடி அமர்ந்திருப்பார்கள். அம்மன் பாதத்தில் இருந்து எலுமிச்சம் பழங்கள் உடனே உருண்டு முந்தானையில் விழுந்தால் நினைத்தது உடனே நடந்தேறும் என்பது நம்பிக்கை. பழம் விழத் தாமதமானால் அந்த காரியமும் தாமதமாகும் என்பதும் நம்பிக்கை. வரமாக கிடைத்த பழங்களை கோயிலில் அமர்ந்து அப்படியே தோலுடன் கடித்துச் சாப்பிட வேண்டும்.
இதேபோல் தொடர்ந்து 9 வாரங்கள் இங்கு வந்து பூங்காவனத்து அம்மனை தரிசித்து பிரார்த்திக்க வேண்டும். நீதி வேண்டுபவர்கள் இங்கு வந்தால் நிச்சயம் கிடைக்கப்பெறுவார்கள். செவ்வாய், வெள்ளி மட்டுமின்றி எந்த நாளும் வழிபடலாம் என்பது இங்கு விசேஷம். முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கள்கிழமையில்தான் கோயிலுக்கு வரவேண்டும்.

வேண்டியதை எல்லாம் அருளும் இந்த பூங்காவனத்தம்மனை தீபம் ஏற்றி வழிபட்டால் மங்கல காரியங்கள் யாவும் நிறைவேற்றுவாள் என்கிறார்கள். ‘விளக்கேற்றி தம்மை வழிபட்டோர் இல்லங்களில் எல்லாம் மங்கல வாழ்வை நிலைக்கச் செய்வாள் இந்த அங்காளம்மா!’ என்கிறார்கள் இவள் பக்தர்கள்.
பெருமைமிக்க இந்த பூங்காவனத்தம்மன் ஆலயத்தில் நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள மங்கல வாழ்வு, செல்வவளம், சுக்கிர யோகம், நாகதோஷ நிவர்த்தி, ஆரோக்கியம் யாவும் கிட்டும். ஆயுள் பலத்தை அதிகரிக்கும் இந்த ஆலயத்தில் திருவிளக்கு பூஜை எனும் அற்புதமான வழிபாட்டில் நீங்களும் கலந்து கொண்டு சங்கல்பிக்கலாம்!
லோக சுபீட்சத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்களின் குடும்ப நலனுக்காகவும் 24-11-23 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சக்திவிகடனும் புட்லூர் பூங்காவனத்தம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுங்கள்! ஆலய நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்காத செல்வமும், நிறைந்த ஆரோக்கியமும் நீண்ட வாழ்வும் அருளும் இந்த சந்நிதியில் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது நிச்சயம்.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
இந்த விளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டால் புட்லூர் பூங்காவனத்தம்மன் அருளால் சர்வ மங்கலங்களும் கிடைக்கும் என்பது உறுதி. நாம் மனதில் நினைத்து வேண்டிக்கொண்ட காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். நம்முடைய மனச் சங்கடங்கள் அனைத்தும் விலகும்; பெண்கள் பூஜையில் அமரலாம். உங்கள் பிள்ளைகளுக்காகவும் குடும்ப உறவுகள், சுற்றம் நட்புகள் நலம்பெற வேண்டிக் கொள்ளலாம்.
எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கவும், சொந்த வீடு அமைய, கல்யாண வரம் கைகூட, கடன் பிரச்னைகள் நீங்கிட, பிள்ளைப் பாக்கியம் கிடைக்க… என சகல பிரார்த்தனைகளை முன்வைத்து நடைபெறவுள்ளது இந்த விளக்குப் பூஜை.

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07