வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக ஹமாஸ் உடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்ய் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளிடையே ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 1400 பேர் இறந்துள்ளனர். பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் உடன் ஒப்பந்தம் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்.பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது: ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக அவர்களுடன் சில ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படலாம். ஆனால் அது என்ன மாதிரியான ஒப்பந்தம் என்பதை இப்போதைக்கு வெளிப்படுத்த முடியாது.
அது திட்டத்தையே சிதைத்துவிடும். அதைப் பற்றி அதிகம் விவரம் தெரிவிக்காமல் இருப்பதே அது நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement