Rape of female hotel staff: 5 arrested | ஹோட்டல் பெண் ஊழியர் பலாத்காரம்: 5 பேர் கைது

ஆக்ரா, உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் கடந்த, 11ம் தேதி இரவு தங்கியிருந்த கும்பல், அங்கு பணியாற்றிய, 25 வயது பெண்ணை மிரட்டி மது அருந்தச் செய்துள்ளது.

பின் அறையில் இருந்து வெளியே இழுத்து வந்து, கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி உள்ளது. அப்பெண் கதறி அழுததையும் பொருட்படுத்தாமல், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோவில் அந்த பெண் கதறி அழுதபடி, தனக்கு நான்கு மகள்கள் உள்ளதாகவும், காப்பாற்றும்படியும் வேண்டுகோள் விடுத்ததும் பதிவாகி உள்ளது. இது, சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.