கெய்ரோ: சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதலில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. இதற்கு எதிராக, பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல், ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையேயும் சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால் இருதரப்பினரும் கடும் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், இதுவரை 9,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சூடானின் டார்பர் மாகாணத்தில் இருதரப்புக்கும் இடையே மீண்டும் தாக்குதல் மூண்டது.
கடந்த ஒரு வாரமாக இந்த மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும், 800க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் போது கிளர்ச்சியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தாக்குதல் நடத்தியதுடன், பல்வேறு இடங்களையும் தீ வைத்தும் கொளுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement