“தேசிய குழந்தைகள் தினமான இன்று சிறு வயதில் அவர்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் நல்வாழ்வுக்கு அடிப்படையாக அமையும். ஆனால், நாட்டில் இன்றைய நிலைமையை பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு மதுவினால் நடைபெற்ற கொலை மற்றும் விபத்துகளிலே விலை மதிக்க முடியாத 20 மனித உயிர்கள் பலியாகி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு ரூ. 633 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனையாகியுள்ளது. நடக்கின்ற சம்பவங்களை பார்த்து கண்ணீர் வடிக்கும் மக்கள், இந்த அரசை எப்படி கேள்வி கேட்பது என்று தவித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தாய்லாந்திலிருந்து சென்னைக்கு ரூ. 25 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டிருக்கிறது. ராஜபாளையத்தில் பட்டப்பகலில் தெருவில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை கண்டித்த சிவகுமார் என்பவர் மனைவி கண் முன்னாலேயே வெட்டி கொலை செய்யப்பட்டுளார்.
பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிற அபாயகரமான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் மிகதெளிவாக புள்ளிவிவரத்தோடு சட்டமன்றத்தில் எடுத்து வைத்தார். ஆனால், முதலமைச்சர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், தன் மகனை மட்டும் விளையாட்டு மற்றும் இளைஞர் மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக நியமித்திருக்கிறார். ஆனால், தமிழ்நட்டிலுள்ள பிள்ளைகள் தங்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி சீரழித்துக்கொண்டிருக்கிறார்களே, இதற்கு முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார். தீபாவளி திருநாளின் போது மக்களுக்காக என்ன சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தார்? பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றார்கள்.

ஆனால், பெருமையாக குடும்பத் தலைவிகளுக்காக மகளிர் உரிமை தொகைக்கு ரூ. 1000 கோடியை வழங்கியுள்ளோம் என்று கூறிவிட்டு, தீபாவளி பண்டிகையில் மட்டும் குடும்பத் தலைவரிடமிருந்து டாஸ்மாக் மூலம் ரூ. 633 கோடியை திரும்ப பெற்றுள்ளனர். அப்படியானால் ஏழை எளிய, சாமானிய, நடுத்தர மக்களுடைய எதிர்காலம் என்ன ஆகும்.?
இன்றைக்கு போதை உள்ள தமிழ்நாடாக முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். இளைஞர்கள் எதிர்காலம் என்னவாகும்? வீதிகளில் சாராய ஆறு ஓடுகிறது
தினந்தோறும் ஆதாரத்தோடு எடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் கண்டன அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் முழுமையாக உள்வாங்கி செயல்பட்டாலே தமிழகத்தில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
நடப்பாண்டில் டாஸ்மாக் விற்பனையை ரூ. 50,000 கோடிக்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக செய்தி வருகிறது.
தீபாவளி அன்று மதுவினால் கொலை மற்றும் விபத்துகளில் 20 பேர் பலியானதற்கு முழுக்க முழுக்க செயல்படாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பு என்று தமிழ்நாட்டு மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள், அதை நான் வழிமொழிகிறேன்.

இனிமேலாவது போதை இல்லாத தமிழக நாடாக உருவாக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கிவிட்டு, டாஸ்மாக் விற்பனை ரூ. 633 கோடி என்பது சாதனையா? வேதனையா?
கூட்டி கழித்து பார்க்கும்போது இந்த ராஜ்யத்திற்கு பூஜ்ஜியமே பரிசாக கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.